அஜ்மேரில்
இருந்து 11 கி.மீ. தொலைவில் பாலைவன விளிம்பில் உள்ள அமைதியான நகர்
புஷ்கர். இந்துக்களின் புனித யாத்திரைத் தலமான புஷ்கர் நகரம்,
அழகான புஷ்கர் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.
`நாக் பகாட்'
அல்லது நாகமலை அஜ்மேருக்கும் புஷ்கருக்கும் இடையே இயற்கை
எல்லையாக இருக்கிறது.
புஷ்கர்
ஏரியைப் பற்றி புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. யாகம் செய்வதற்கு உரிய இடம்
ஒன்றைத் தேடி பிரம்மா அலைந்தபோது, ஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தாராம். அப்போது
அவருடைய கரங்களில் இருந்து ஒரு தாமரை மலர் தரையில் விழுந்ததும்,
மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. அவற்றில் ஒன்று தான்
பிரம்மா வேள்வி செய்த புஷ்கர்.
முப்புறமும்
மலைகள் சூழ்ந்த புஷ்கரில் கோயில்கள் ஏராளம். இவற்றில் முக்கியமானது பிரம்மா ஆலயம்.
நாட்டில் பிரம்மாவுக்குள்ள ஒரே கோயில் இதுதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு.
இந்த கோயில் செந்நிறத்தில் கூரான கோபுரத்தைக் கொண்டது. தலைவாசலில்
பிரம்மாவின் வாகனமான அன்னம் அழகிய சிலையாகக் காட்சி தருகிறது.
சாவித்திரி
கோயில் : பிரம்மாவின் முதல் மனைவி சாவித்திரிக்கு என ஒரு கோயில் இங்குள்ளது. இது
பிரம்மா கோயிலுக்குப் பின்னால் உள்ள மலையின் மீது அமைந்துள்ளது. கோயிலுக்கு பக்தர்கள்
எளிதாக ஏறிச் செல்லும் வகையில் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோயிலில்
இருந்து ஏரியையும் சுற்றியுள்ள பாலைவனப் பரப்பையும் காண்பது அனைவரது உள்ளத்தையும்
கொள்ளை கொள்ளும் காட்சியாகும்.
புனிதமாகக்
கருதப்படும் புஷ்கர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித
நீராடுவார்கள்.
No comments:
Post a Comment
Feel free to express about this blog and your need and requirements regarding yatra and pilgrimages.