ஜோத்பூர் ராஜா, ராவ்
ஜோதாகூட கர்னி மாதாவை ஜோத்பூருக்குக் கூட்டிப்போய் தான் புதுசா கட்ட இருக்கும்
கோட்டைக்கான இடத்தை ஆசீர்வதிக்கச் சொல்றார். இந்த மாதாதான் அஸ்திவாரம் போட முதல்
கல்லை எடுத்துக் கொடுத்தாங்களாம்.
1454 வது வருசம் கர்னி மாதாவின் கணவர் இறந்துட்டார். தங்கையின் நாலு பிள்ளைகளோடு இவுங்க இருந்தாலும் அடிக்கடி தவம் செய்ய ஒரு குகைக்குப் போயிருவாங்களாம். இப்படி இருக்க, 1463 வது வருசம் பக்கத்தூர் திருவிழாவுக்குப் போன தங்கையின் கடைசிப்பையன் லக்கன் அங்கே ஒரு குளத்தில் குளிக்கும்போது மூழ்கி இறந்துடறான். அவன் சவத்தைக் கொண்டுவந்து அக்கா கர்னிமாதாவின் முன்னால் போட்டுட்டு அவனை எப்படியாவது உயிர்ப்பிச்சுக் கொடுக்கணுமுன்னு தங்கை குலாபி வேண்டிக்கிட்டுக் கதறி அழறாங்க.
கர்னிமாதா யமனிடம் உயிரை மீண்டும் தரும்படிக் கேட்க, யமன் சொல்றான். ' ஐ ஆம் ஸாரி. அந்த உயிர் ஏற்கெனவே பூலோகத்தில் வேற இடத்துலே பிறந்துருச்சு. என்னாலே இனி ஒன்னும் செய்ய முடியாது'ன்னு:(
கர்னிமாதாவுக்கு கோபம் வந்துருச்சு. 'ஓக்கே..... இனி என் வம்சாவளியில் பிறந்த யார் உயிர் போனாலும் அவுங்களை வேறெங்கும் பிறக்க வைக்க உனக்கு ரைட்டு இல்லை. அந்த உயிர் எலிகளா மறுபிறவி எடுத்து இங்கே என்னுடன் கூடவே இருக்கட்டும்' ன்னு சொல்லிவச்சாங்க யமனிடம்.
இப்படிப் பிறந்த எலிகள்தான் இந்தக் கோவில் முழுசும் ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க. உலகத்துலேயே எலிக்கோவிலா இருப்பது இது மட்டுமே! ( மற்றபடி மதுரா வ்ருந்தாவன் கோவில்களில் கருவறையில் எட்டிப்பார்க்கும் எலிகள் கணக்குலே வராது, கேட்டோ!)
இருபதாயிரம் எலிகள் வரை இங்கே இருக்குன்னு ஒரு கணக்கு. அதுகள் ஓடி ஒளியத் தோதா அங்கங்கே சுவர்களில் கொஞ்சம் ஓட்டைகள் வச்சுருக்காங்க.
1538 வது வருசம் தன்னுடைய 151 வது வயசில் கருவறைக்குப் பக்கம் வந்து அப்படியே மறைஞ்சுட்டாங்களாம் மாதா. இறுதிச் சடங்குக்கு உடல் இல்லாமப் போயிருச்சுன்னு சொல்றாங்க.
கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதானே? கர்ணி மாதாவும் நம்பியவர்களைக் கைவிடுவதில்லை என்பது வந்து போகும் பக்தர்களைப் பார்த்தாலே தெரியுது!